மாளிகாவத்தையில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!
கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
புறக்கோட்டையில் இருந்து மாளிகாவத்தையில் உள்ள ஒருவருக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு கிலோ கிராமுக்கும் மேற்பட்ட தொகை ஹெரோயினை மாளிகாவத்தை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனை எடுத்துச் சென்ற வத்தளை பிரதேசத்தை சேர்ந்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும், நாளை திங்கட்கிழமை சந்தேக நபர் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர், ஹெரோயின் போதைப் பொருளை மொத்தமான விநியோகம் செய்து வரும் நபர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.