பலத்த பாதுகாப்புடன் எம்பிலிப்பிட்டிய! மதுபானக் கடைகள் மூடப்பட்டது!

291

 

எம்பிலிப்பிட்டிய நகரின் அனைத்து மதுபானசாலைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைவாக பிரதேச செயலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இதன் பிரகாரம் இன்று அனைத்து மதுபானசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த காலத்தில் எம்பிலிப்பிட்டிய நகரில்  பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்பிலிப்பிட்டியவில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்!  விசேட அதிரடிப்படையினரும் குவிப்பு

பொலிஸாரின் தாக்குதல் காரணமாக உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் இறுதிக்கிரியை இன்று நடைபெற்ற நிலையில் , நகரின் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய நகரில் கடந்த 4ஆம் திகதி விருந்து வைபவம் ஒன்று நடைபெற்ற இடத்துக்கு அத்துமீறிப் பிரவேசித்த பொலிஸார், தமக்கும் மதுபானம் வழங்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் விருந்தில் கலந்துக் கொண்டிருந்தவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், போலியான குற்றச்சாட்டை முன்வைத்து விருந்து வைபவத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது 41 வயதான நபர் ஒருவர் மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவம் காரணமாக கடந்த சில நாட்களாக எம்பிலிப்பிட்டிய நகரில் பொதுமக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆவேசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை எம்பிலிப்பிட்டிய பொது மயானத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு எம்பிலிப்பிட்டிய நகரம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட பொலிசார் மற்றும்  விசேட அதிரடிப்படையினரும்  குவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் தொடர்ந்தும் ஆவேசமான நிலையில் நகரில் நிலைகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE