சீன விஜயத்தை திடீரென ஒத்திவைத்த மஹிந்த ராஜபக்ச

300
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.

அவருக்கு எதிராகவும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளே இந்த தடைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுமார் ஒரு மாத கால பயணத்தை மேற்கொண்டு நாளை சீனாவுக்கு பயணமாவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பயணம் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவர் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவரது இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த பயணத்தின் பின்னர் சீனா பயணிப்பார் என தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் வினவிய போது தனது உடல்நிலை சுகவீனம் காரணமாக தனது இந்த பயணத்தை பிற்போட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

357861-mahinda-rajapaksa

SHARE