யாழ். தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை! பெண்ணொருவர் மரணம்

254

 

தனியார் வைத்தியசாலையில் பணத்தைக் கொடுத்து பிணமாக்கிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்க தனியார் வைத்தியசாலையில் பணத்தை செலுத்தி நேற்று சத்திர சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

ஆனால் தொடர்ந்து குறிப்பிட்ட பெண்ணுக்கு இரத்தப் பெருக்கு காணப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தாத நிலையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

திருகோ8vdbedணமலை பாலையூற்றைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வெற்றிவேலு இலட்சுமி (வயது 54)  என்பவரே அதிக இரத்தப் பெருக்கு காரணமாக மரணம் அடைந்தவராகும்.

இவருடைய மரண விசாரனை இன்று திங்கட்கிழமை நீதிமன்ற பணிப்புரைக்;கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரனையில் கணவர் சாட்சியமளிக்கையில் கொழும்பில் அதிகளவான பணத்தை சத்திர சிகிச்சைக்கு கோரினார்கள்.

நான் கூலி வேலை செய்பவன். அந்தளவு பணத்தை செலுத்த முடியாத நிலையில் இங்கு இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE