அநுராதபுரம் புதிய நகரில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி –

310

 

அநுராதபுரம் புதிய நகரில் நகர சபை வீடமைப்பு தொகுதிக்கு அருகில்  கட்டடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டிட நிர்மாdeathணிப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் நின்று வேலை செய்து கொண்டிருந்த பலஞ்சி மீது சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கல்னேவ மற்றும் தலகொலவெவ பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பாதுகாப்பின்றி அந்த பணிகளில் ஈடுபட்டிருந்ததுடன், இறந்தவர்கள் தலைக்கவசம் கூட அணிந்திருக்கவில்லை என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

SHARE