ஹட்டனில் வாகன விபத்து – இருவர் படுகாயம்

296
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து உள்ளாகியுள்ளது.

நேற்றிரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது. இதில் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேனின் சாரதியும் மற்றுமொருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து லக்ஷபான நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மஸ்கெலியா பகுதியிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.

வேன் சாரதி வாகனத்தை அதிக வேகமாக செலுத்தியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE