இலங்கையில் அண்மைக்காலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த வருடத்தில் மட்டும் ஆயிரத்து நான்கு விவாகரத்து வழக்குகள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னைய வருடங்களில் அண்ணளவாக 950 வரையிலான விவாகரத்து வழக்குகளே பதிவாகியிருந்தன.
விவாகரத்துப் பெறுவதற்கான மூன்று காரணங்களில் ஒன்றான பராமரிப்பின்றி இடைநடுவில் கைவிட்டுச் சென்றமை என்ற காரணத்தை முன்வைத்து பெண்களே தங்கள் கணவன்மாருக்கு எதிராக கூடியளவிலான வழக்குகளைப் பதிவு செய்துள்ளமையும் குறித்த புள்ளிவிபரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.