புதுகுடியிருப்பு – புதுமாதலன் பிரதேசத்தில் உந்துருளி இரண்டு, ஒன்றுகொன்று மோதியதில், ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தில், காயமடைந்தவர்களில் ஒருவர், கடும் காயங்கள் காரணமாக மாஞ்சோலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த மற்றைய மூன்று பேர் புதுகுடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான உந்துருளி ஒன்றில், மூன்று பேர் வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.