காசல்ரீ லெதண்டி தோட்டத்தில் கடை ஒன்றில் பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் குறித்த கடையில் கொள்ளையடிக்க முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரை பிடித்த அயலவர்கள் தொலைப்பேசி மூலம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.