யாழில் ஜனாதிபதி, பிரதமர் பங்குபற்றவுள்ள பொங்கல் நிகழ்வு! முகாம்களை அகற்றும் படையினர்

309
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியினை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றனவா இல்லை, ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வின் பகுதினை படைமுகாங்கள் அற்ற பகுதியாக காட்டுவதற்கு எடுக்கப்படும் இரகசிய முயற்சியா என்பது தொடர்பான சந்தேகங்களும் எழுந்துள்ளது.

இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலையத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ள ஆலயத்தினை சூழவும், அதனை அண்மித்தும் உள்ள படைமுகாங்கள் அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆலைய சூழலினை துப்பரவு செய்யும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு இராணுவ முகாங்கள் அகற்றப்படும் பகுதிகள் உட்பட மேலும் சில ஏக்கர் காணிகள் ஜனாதிபதி, பிரமரின் உத்தரவின் பேரில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான சில கணக்கொடுப்புகளும் மாவட்டச் செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் நிகழ்வு நடைபெறும் பகுதியினை இராணுவப் பிரதேசமாக் காட்டுக் கொள்ள விரும்பாமல் அப்பகுதிகளில் உள்ள படைமுகாங்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப் படுகின்றது.

c7c00384406c35b81741b74b364344cf_XL

 

SHARE