வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக 5000 ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சித்த நபர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைகுழுவின் அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – கொட்டஹேன பகுதியில் தனியார் வாகன பயிற்சி பாடசாலை ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இந்தப்பணத்தை வேரஹெரயில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திலுள்ள அதிகாரி ஒருவருக்கு வழங்கவே பெற்றுக் கொண்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே, வேரஹெர மோட்டார் திணைக்களத்தில் வைத்து நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்ரசிறி தெரிவித்துள்ளார்.