மன்னார் மாவட்டத்தில் நண்டு வளர்ப்பினை ஊக்கப்படுத்த உதவிகள் எவையும் அற்ற நிலையில் தனியார் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நண்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
குறித்த நண்டுகள் வளர்க்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னாருக்கு சென்றிருந்த கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த நண்டு வளர்ப்பு நிலையத்திற்குச் சென்று அங்கு வளர்க்கப்பட்டுள்ள நண்டுகளை பார்வையிட்டார்.
அத்தோடு குறித்த நண்டு வளர்ப்பு நிலையத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் போது மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மாவட்ட இணைப்புச் செயலாளர் என் எம்.முனவ்பர் உட்பட பலர் அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.