சில தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களை பலிகொடுத்தனர்.
தெற்கு அரசாங்கங்கள் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அமைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு வெறும் வாக்குறுதிகளின் மூலம் எவ்வித நலனும் கிடைக்கப் போவதில்லை என டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு குறித்த விவாதத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.