புலிகளை ஒழிப்பதற்கு பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது – ஒமல்பே சோபித தேரர்

306
30 ஆண்டு கால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு படையினர் பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளிப்படுத்துதல் பாரிய குற்றமாகவே பார்க்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்தால் அது அச்சுறுத்தல் ஏற்பட்டால் அது ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்தார்.

எக்னெலிகொட கொலை தொடர்பில் ஸதம்பித்திருந்த விசாரணைகள், முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

எனினும், விசாரணைகளின் ஊடாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் கசிவது ஆபத்தானது.  இவ்வாறு தகவல் கசிவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

30 ஆண்டு கால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு படையினர் பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது.

அவ்வாறு வெளிப்படுத்துதல் பாரிய குற்றமாகவே பார்க்க வேண்டும் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதிக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியான தகவல்கள் குறித்து கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கு தொலைபேசி மூலம் பதிலளித்த சோபித தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE