இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்களும் கிடைக்கப் பெறவில்லை.
ஊடகவியலாளர் எக்னெலிகொட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வழக்குத் தொடர முயற்சிக்கப்படுவதாக உத்தியோகப்பற்றற்ற ரீதியில் தகவல் கிடைத்துள்ளது.
இராணுவத்திற்கு சேறு பூசும் நோக்கில் எவரும் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியை தெளிவூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றேன் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து சிங்கள பத்திரிகையொன்று பாதுகாப்புச் செயலாளரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு இராணுவம் உரிய வகையில் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என ஹோமாகம நீதவான் தெரிவித்திருந்தார் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.