இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எஸ்.எம்.எம். அமீர் அலி, அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒரு வருடத்திற்கு பின்னர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கடந்த வருடம் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 2500மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் , கிழக்கு மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மட்டு மாவட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.