சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல்,மோசடி விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி மற்றும் 2014ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்கான அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சமர்பிக்கவில்லை என குற்றம் சுமத்தி துமிந்தவுக்கு எதிரான இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.