நாடு முழுவதும் தீப்பெட்டிக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பெட்டி ஒன்றின் சாதாரண விலை 5 ரூபாயாக காணப்பட்ட அதேவேளை, தற்போது தீப்பெட்டி ஒன்றின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தீப்பெட்டிக்கு பதிலாக லைட்டர்களை கொள்வனவு செய்வதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் தீப்பெட்டியானது நாட்டிற்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.
எனவே, இதற்கான வெடிமருந்து வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் அந்த வெடிமருந்தை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையே இந்தப் பற்றாக்குறைக்கு காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஜ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் அரசு உடனடியாக செயற்பட்டு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.