கசப்பான யுத்தகால வரலாற்றை சிங்களப் பேரினவாதிகள் மறந்துவிடக்கூடாது – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் எம்.பி இடித்துரைப்பு

276
கடந்த பல தசாப்தங்களாக இனங்களுக்கிடையே உரிமைகளை பகிர்ந்தளிக்கும் விடயங்களில் பேரினவாத அரசுகள் பேச்சுவார்த்தை, தீர்மானம் மீறல் என மாறி மாறி காலத்தை போக்கிவிட்டார்கள். நாட்டில் அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டிய மக்களை இனமுறுகல் நிலையினை சிந்திக்க வைத்துவிட்டார்கள்.
பலவருட தமிழர் அகிம்சை போராட்டங்கள், தமிழ், முஸ்லீம் இன மக்களின் மீதான இனக்கலவரங்களாக உருவெடுத்தன. அரச அடக்குமுறைகள் கட்டுக்கடங்காது சென்ற போது கூட து.சு.nஐயவர்த்தன போர் என்றால் போர் என்ற அளவுக்கு நாட்டின் தலைவர் பாவிக்கக்கூடாத வார்த்தைகளை பாவித்து, இனமுறுகலுக்கு தீர்வு காணமுற்படாது, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல் இனக்கலவரங்கள் எற்படக்காரணமாகினார்.
தமிழ் அகிம்சை போராட்டங்கள் ஆயுதப்போராட்டங்களாக விரிவு பெற்றன. இந்திய அரசும் நேரடியாக தமிழர் போராளிகளுக்கு பயிற்சி வழங்கி, ஆயுதம் வழங்கி தமிழர் ஆயுதப்போராட்டத்தின் ஆசான்கள் ஆகினர் என்பது அனைவருக்கும் தெரிந்த பட்டவர்த்தன உண்மை.
1987ம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ்காந்தியுடன் ஒருகையால் கைச்சாத்திட்ட து.சு.nஐயவர்த்தன மறுகையால் தட்டிவிடுவது போல், கைச்சாத்திட்ட ஒரிரு நாட்களில் வழங்கிய பேட்டியில், சர்வஐனவாக்கெடுப்பு ஒன்று நடந்தால் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக மக்களை அணிதிரட்டி வேலை செய்வேன் என சூழுரைத்தார். மொத்தத்தில் தனது அரசியல் நரித்தனத்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடவிட்ட கொடும் தலைவர்களில் ஒருவராகினார்.
தொடர்ந்த தமிழர் போராட்டம் பல தமிழினப்படுகொலைகளை சந்தித்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவி சிங்கள மக்களும் கொல்லப்பட்டனர்.
இருபத்தையாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் படையினர் அங்கவீனர் ஆகினர். தமிழர் தேசிய விடுதலைக்காக தாமாகவே முன்வந்து பல பத்தாயிரம் போராளிகள் வீரகாவியமாகினர். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயினர். நீதி நியாயத்திற்காக போராடிய பல சிங்கள முற்போக்கு வாதிகள், பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். தமிழ் இனத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக அவர்கள் குரல் வளைகள் உடைக்கப்பட்டன.
இவ்வளவு விடயங்கள் நடந்த பின்னரும் கசப்பான வரலாற்றினை பேரினவாதிகள் மறப்பார்கள் எனின், வரலாறு அவர்களை மன்னிக்காது. தமிழ் தேசிய விடுதலை உணர்வும் தமிழர்களிடையே மறையாது என்பதை கூறிவைக்க விரும்புகிறேன்.
SHARE