வவுனியாவில் பசுமை என்ற மகுடம் தாங்கிய சஞ்சிகை ஒன்று தைத்திருநாளாகிய 15-01-2016 நண்பகல் 12 மணிக்கு குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் வைபவ ரீதியாக வெளியிடப்படவுள்ளது.
வவுனியா பொய்கை பதிப்பகத்தின் வெளியீடாகிய பசுமை இதழ் காலாண்டுக்கு ஒரு தடவை பல்சுவை இதழாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் மிதயா கானவி. துணையாசிரியர் வே.முல்லைத்தீபன். நிர்வாக ஆசிரியர் நா.தயாபரன். ஆலோசனை வழிகாட்டல் ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம்.
பசுமை இதழை கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நா.பிரபாகர குருக்கள் வெளியிட்டு வைப்பார். முதற் பிரதியை வவுனியா குருமண்காட்டைச் சேர்ந்த மூத்த விவசாயி எம்.குமாரகுலசிங்கம் பெற்றுக்கொள்வார்.