தமது செந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடிய நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:- இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத் திருநாள் வாழ்த்துக்கள். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் இந்த நன்னாளில் தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் இந்த தைப்பொங்கலல் திருநாளைக் கொண்டாத முடியாத நிலையில் உள்ள எமது மக்களின் நிலைமை வெகுவரைவில் மாறவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்த நாளில் பல்வேறு சமய காரியங்களில் ஈடுபடும் மக்கள் அனைவரும் நலிவடைந்துள்ள எமது இனத்தின் வாழ்வின் மீளெழுச்சிக்காகவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்தகைகளில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் இறை ஆசியுடன் கூடிய எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் – என்றுள்ளது. – See more at: http://www.malarum.com/article/tam/2016/01/14/13242/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.wq6f2pSg.dpuf
Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com