வவுனியாவில் .இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள் கைகலப்பு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

315

 

வவுனியாவில் .இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள் கைகலப்பு
வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வவுனியாவில் இ.போ.ச சாலை சாரதிகள் மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள் இன்று 8.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்கள்.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இ.போ.ச பேரூந்தின் சாரதி வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்தினை நிறுத்திவிட்டு பயணிகளை பேருந்தில் ஏற்ற முற்படுகையில் தனியார் பேரூந்து சாரதிகள் சிலர் இ.போ.ச.பேருந்தின் சாரதியை தாக்க முற்பட்டுள்ளனர். எனினும் பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற மற்றைய இ.போ.ச. சாரதிகள் கைகலப்பை தடுத்ததுடன் தனியார் பேரூந்து சாரதிகளை அங்கிருந்த அகற்றினர்.
எனினும் வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் பறப்பட்ட இ.போ.ச. பேரூந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கையில் இ.போ.ச. பேரூந்தினை தனியார் பேரூந்து வீதியில் முந்திச் செல்வதற்கு புளியங்குளம் வரை இடம் கொடுக்கவில்லை என்று இ.போ.ச பேரூந்தின் சாரதி பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து
இது தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பயணிகளை பேரூந்தில் ஏற்றுவதற்கு தனியார் மற்றும் இ.போ.ச சாரதிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டியே இக்கைலப்பிற்கு காரணம் என்று தெரியவருகிறது.

 

SHARE