சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்களுக்கு தற்காலிக வீடுகள் அமைக்க உதவி

316
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள 194 குடும்பங்களுக்கும் தற்காலிக வீடுகள் அமைக்க வடமாகாண சுகாதார, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களால் தற்காலிக வீடுகள் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக ஒரு குடும்பத்துக்கு 69700 ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறுவதற்கு காணிகளற்ற நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ் நலன்புரி நிலையத்தில் 194 வரையான குடும்பங்கள் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்கள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் தற்காலிக வீடுகள் அமைக்கவே இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ப.சத்தியசீலன், அமைச்சின் உதவி செயலாளர் ஜெ.ஜெனிட்டன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE