திருகோணமலை – இலங்கை முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் மரணம்

329
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை முகத்துவாரம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். வெருகல் – முட்டிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஜோபாலசிங்கம் வசந்தன் (19 வயது ) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் முச்சக்கர வண்டியுடன் மோதியதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது பிரேத பரிசோதனைக்காக சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE