அரசாங்கத்திற்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு அவன்ட்கார்ட் நிறுவனத்திடம் கோரிக்கை

307
அவன்ட்கார்ட் கடல்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாரிய ஊழல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த கோரலை விடுத்துள்ளது.

2012- 14ஆம் ஆண்டுக்களுக்காகவே இந்த தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவன்ட்கார்ட் நிறுவனம் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்த நிறுவனமாகும்.

குறித்த நிறுவனம் அதிகளவான பண சம்பாதிப்பில் ஈடுபட்டபோதும் அதில் குறைந்தளவான தொகையே அரசாங்கத்துக்கு செலுத்திவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதன் நடவடிக்கைகளை கடற்படையினருக்கு கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால நடவடிக்கை எடுத்தார்.

avengard

SHARE