சிங்கள இனவாத சக்திகளிடம் இருக்கும் தமிழர்களின் பூர்வீக சொத்துக்களையும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளையும் முழுமையாக விடுதலை செய்ய முடியாத சிங்கள இனவாத அரசில், ஏன் தமிழர்கள் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் ?
தமிழர்களின் பூர்வீக காணிகளை கொள்ளையடித்து வைத்திருக்கும் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் மாயவலைக்குள் திரும்ப திரும்ப விழுந்து கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.
தமிழ் அரசியல்வாதிகளே, உங்களிற்கு விளங்கவில்லையா ? இனவாத சிங்களம் தமிழர்களிற்குள் பிரிவினைவாத அரசியல் செய்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் வரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழித்த சிங்கள இனவாத அரசை உலகநாடுகளில் இருந்து காப்பாற்றுவதற்கு சிங்கள இனவாத அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் போடும் திட்டங்களிற்கு மிச்சமாக இருக்கும் அப்பாவி தமிழர்கள் நாளுக்கு நாள் ஏமாற்றப்படுகின்றார்கள்.
கடந்த 25 வருடங்களாக தமிழர்களின் பூர்வீக காணிகளை கொள்ளையடித்து வைத்திருக்கும் சிங்கள இனவாத அரசு, கடந்த சில வருடங்களாக சிறு சிறு துண்டுகளாக(ஏக்கர்) பிச்சை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பிச்சையை தமிழ் அரசியல்வாதிகள் நாயா பேயா அலைந்து கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் சிங்கள இனவாத அரசியல்வாதிகளிடம்.
வடக்கில் மட்டும் தமிழர்களின் 6,000 ஏக்கர் காணிகளை பதுக்கி வைத்திருந்த சிங்கள அரசு இன்றுவரை வெறும் 1,500 ஏக்கர் காணிகளை முழுமையாக திருப்பிக் கொடுத்து விட்டோமென்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றது. திருப்பி கொடுத்த காணிகளைக் கூட இன்றுவரை மக்கள் எதையும் செய்ய முடியாத சூழ்நிலையில் தான் இருக்கின்றார்கள். நிலக்கண்ணி வெடிகளும் மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தான் இருக்கின்றது. இதை முழுமையாக செய்து கொடுக்க வேண்டியவர்கள் சிங்கள இனவாத அரசு தான்(கொள்ளையடித்தவர்கள்).
முள்ளிவாய்க்கால் வரை பல துயரங்களை இழந்த தமிழ் இனம், எதிர்காலத்தில் கூட சிங்களத்திடம் பிச்சை எடுக்க மாட்டான். சிங்கள இனவாத சக்திகள் தங்களை காப்பாறிக் கொள்வதற்காக தமிழ் அரசியல்வாதிகளை பல கூறுகளாக பிரித்து அரசியல் வேட்டை செய்கின்றார்கள். அந்த வேட்டையில் சம்மந்தர் ஜயா அணிகளாக இருக்கட்டும் அல்லது விக்கினேஸ்வரன் ஜயா அணிகளாக இருக்கட்டும், இந்த இரு அணிகளையும் சிங்களம் தனது வேட்டையணிகளாகத் தான் பார்க்கின்றது.
தற்சமயம் எதிர்கட்சியாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் தமிழர்களிற்கு கொடுத்த எந்த வாக்குரிதியை முழுமையாக நிறைவேற்றினீர்கள் ?
கடிநொடியின் ஆலோசனை,
சம்மந்தர் ஜயா எதிர்க்கட்சி பதவியையும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் பதவிகளையும் முழுமையாக துறந்து மற்றும் விக்கினேஸ்வரன் ஜயா தனது வடமாகாண முதலமைச்சர் பதவியையும் மற்றும் வடமாகாண உறுப்பினர்கள் தங்களின் பதவிகளையும் துறந்து ஒரு குடையின் கீழ் நின்று சிங்கள இனவாத அரசியல்வாதிகளிற்கும் மற்றும் மேற்குலக நாடுகளிற்கும் சாவு மணியடியுங்கள். இதன் பிறகு சிங்களம் தன்னை உலகநாடுகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக சில வாரங்களில் தமிழர்களிற்கான தீர்வுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தயாராகும்.
அப்படி உங்களிற்கு இந்த முயற்சியை செய்ய விருப்பமில்லையென்றால் தமிழ் அரசியல்வாதிகள் மக்களிற்கு நம்பிக்கையான வாக்குரிதியை மட்டும் கொடுங்கள் அல்லது பதவிக்காகத் தான் நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள் என்பதை நாம் வேதனையோடு புரிந்து கொள்கின்றோம். எம்மர்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றமோ அல்லது மாகாணசபைக்கு சென்ற நீங்கள் எதையும் செய்ய முடியாவிட்டால் பதவிகளில் இருந்து என்ன பலன் ?
இலங்கைத் தீவில், சிங்காள அரசுகள் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும், இனவாத புத்த கொள்கை வகுப்பாளர்களின் கொள்கையில் எந்த ஒரு மாற்றமுமில்லை. இது தான் யதார்த்தமான உண்மை.
சிங்கள அரசியல்வாதிகளிற்கு பொங்கலையும் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு கிரிபத்தையும் மாறி மாறி ஊட்டி அரசியல் செய்யுங்கள். இலங்கைத் தீவில் வெகு விரைவில் பல அதிசயங்கள் நிகழ வாய்ப்பு இருக்கின்றது. இதை எந்த அரசியல்வாதிகளாலும் தடுக்க முடியாது.
