அட்டன் விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை

339

 

கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான 8 வயது சிறுவன் மற்றும் அவருடைய சகோதரன் கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

18856795-48d4-47d4-9181-77d97b06a5d6

3fa8e069-b247-4f30-b759-e1538921709f 4d8942d5-1273-4ab7-9f86-dfb536adfa59 31c03817-fbaf-4aff-a975-082b0dc497b4 426d9d95-ec2b-4332-9020-0280c75ebc5c

அட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் இவ்விபத்து 15.01.2016 அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

15.01.2016 அன்று தைப்பொங்கல் தினத்தில் மாலை வேளையில் பட்டல்கலை தோட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கென சென்ற 8 வயது சிறுவனும் அவரின் சகோதரனும் பட்டல்கலை பகுதியின் பிரதான வீதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வந்த முச்சக்கரவண்டி வீதியில் சென்ற இவர்களின் மீது மோதி முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுங்காயமடைந்த சகோதரர்கள் அயலவர்களினால் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் இவர்களின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டதனால் கண்டி வைத்தியசாலைக்கு உடனடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதியை அயலவர்கள் பிடித்து அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE