சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இரத்தினக்கற்கள் குறித்து கணக்காய்வு

312

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ள இரத்தினக்கற்கள் தொடர்பில் அரசாங்கம் கணக்காய்வு செய்யவுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு நாட்டை விட்டு பெருந்தொகை இரத்தினக் கற்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இரத்தினக்ajith_sivakarthikeyan003 கற்கள் பற்றி மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்கள் கொண்டு செல்லப்பட்டதனால் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து இரத்தினக்கற்கள் எடுத்துச்செல்லப்படுவதனை தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.

அப்போதைய அரசியல் சக்திகளின் அழுத்தம் காரணமாக இரத்தினக் கற்கள் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதனால் நாட்டுக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE