தெமட்டகொட விபத்துடன் தொடர்புடைய மாணவனின் தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்

297

 

தெமட்டகொட வீதி கடவையில் தாய் மற்றும் மகள் உயிரிழக்க காரணமான வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவனின் தாய் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக பிணை மனுவை சமர்பித்திருந்தார். எனினும் பிணை வழங்க மறுத்துள்ள புதுக்கடை போக்குவரத்து நீதிமன்றம், பெண்ணை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தெமட்டகொடை வீதி மஞ்சள் கடவையில் கார் மோதி தாயும் 10 வயது மகளும் உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை 15 வயதான பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்றது பின்னர் தெரியவந்தது.

இதனையடுத்து மாணவன் கைது செய்யப்பட்டதுடன் சிறுவனுக்கு காரை ஓட்டிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் மாணவனின் தாய் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மாணவனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையும் பெண்ணை 25 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று சட்டத்தரணி ஊடாக பெண் பிணை மனு கோரி மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை நிராகரித்த நீதிமன்றம் பெண்ணை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

SHARE