இந்தியாவில் சாதனை புரியும் யாழ் சிறுமி!

347

 

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.

தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இம் முறை இச் சிறுமி மாநிலங்கள் அளவில் சென்னை வேளச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்ற போட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று யாழ் வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் 9 வயதுக்குட்பட்ட 50m buterfly நீச்சலினை 39 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல முறை நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE