நோர்வூட் பகுதியில் காட்டுத் தீ – 15 ஏக்கர் நாசம்

312
ஹற்றன்  – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று  இரவு 7 மணியளவில் காட்டுத் தீ பரவியுள்ளது.

இந்தக் காட்டுத்தீயில் 15 ஏக்கர் காடு தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த பகுதியில் யாராவது தீ வைத்ததால் இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதா? அல்லது இயற்கையான காட்டுத்தீயா? என இதுவரை தெரியவில்லை என நோர்வூட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் இந்த தீச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை குறித்த தீயை கட்டுப்படுத்த நோர்வூட் பொலிஸார் செயற்பட்டதன் பயனாக சில மணிநேரங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE