கடந்த வருடத்தின் டிசம்பர் மாதமே அதிகமான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்ற மாதமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 107 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் முழுவதும் கிடைத்த முறைப்பாடுகளின் படி நுகேகொடை பிரதேசத்தில் மோட்டார் வண்டி காணாமல் போனமை பற்றியும் கம்பஹா பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டி திருட்டுப்பற்றியுமே முறைப்பாடுகள் அதிகம் கிடைத்ததாகவும் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.