விஜயகலாவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது – திவயின

283
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மயிலிட்டி துறைமுகத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

பிரதேச மீனவர்களின் நலனை கருத்திற் கொண்டு மயிலிட்டி துறைமுகத்தை பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மயிலிட்டி துறைமுகம் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை, அந்தப் பிரதேசத்தை மீனவர்களுக்கு வழங்கினால், பலாலி விமான நிலையத்திற்கு ஆபத்தான நிலை ஏற்படக் கூடுமென வடக்கு இராணுவ அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மயிலிட்டி துறைமுகத்தை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த மீன்பிடித் துறைமுகம் பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்படுவதாக இராணுவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் அடிப்படையில் மயிலிட்டி துறைமுகத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

vijayakala-380-seithy-news

SHARE