பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு சட்டவிரோதமானது, விசாரணைகளுக்கு செல்ல வேண்டாம் – அஜித் பிரசன்ன

273
பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு சட்டவிரோதமானது என்பதுடன், அதன் விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றவர்கள் அதனைப் புறக்கணிக்குமாறும் மேஜர் அஜித் பிரசன்ன வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த அணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், தாய்நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவருமான மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆதரவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேஜர் அஜித் பிரசன்ன மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொலிஸ் திணைக்களத்தில் புதிதாக ஒரு பிரிவை உருவாக்குவதாயின் பாதுகாப்பு அமைச்சர் தான் அதனை உருவாக்க வேண்டும். ஆனால் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு பொலிஸ் மா அதிபரின் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது சட்டவிரோதமானது.

எனவே இனிவரும் காலங்களில் யாராவது பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் விசாரணைகளுக்கு அiழைக்கப்பட்டால் அதற்கு சமூகமளிக்க வேண்டியதில்லை.

அதே போன்று பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு யாரையும் கைது செய்யவும் முடியாது. அவ்வாறு கைது செய்வதற்கு வந்தால் அடித்துவிரட்டவும் முடியும்.

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்கு எதிரான எனது விமர்சனம் குறித்து யாரும் இதுவரை என்னிடம் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு விசாரணை மேற்கொண்டாலும் நான் அஞ்சப் போவதுமில்லை என்றும் மேஜர் அஜித் பிரசன்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

hqdefault (2)_0

SHARE