குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

290
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குணரட்னம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குமார் குணரட்னம் கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி கேகாலை அக்குருவெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குமார் குணரட்னத்திற்கு எதிரான குற்றச்சாட்டு பிணை வழங்க முடியாத குற்றச்சாட்டு இல்லை என சுட்டிக்காட்டும் அரசியல் அவதானிகள், அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காகவே அவர் தொடர்ந்தும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

குணரட்னத்திற்கு எதிரான இந்த அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியும் இருப்பதாக கூறப்படுகிறது.

Kumar

SHARE