மன்னார் எழுத்தூர் பகுதியில் துணிகர கொள்ளை

304
மன்னார் ஏழுத்தூர் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆசிரியர் ஒருவரின் வீடு இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஏழுத்தூர் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிலேயேஇக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்த மூவர் கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆசிரியர்களான கணவன் மனைவி மற்றும் ஆசிரியரின் தகப்பன் (கணவனின் தகப்பன்) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெறுமதிவாய்த பொருட்களை கொள்ளையர்கள் சூறையாடிய பின் தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

800734215thief1

SHARE