ஈழத்தில் நடந்த உண்மையை எடுத்து சொல்லும் யாழ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

573

புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள திரைப்படம்யாழ்.

பல தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய படம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர் வினோத் கிஷ்ணன், மிஷா மற்றும் பாலுமகேந்திராவால் பெரிதும் பாராட்டப்பட்ட சஷி நடித்துள்ளார். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படமாக வந்துள்ளது, இதில் இடம் பெற்றுள்ள சிவயநம பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE