விஜய்-பரதன் படத்தில் தொடரும் சஸ்பென்ஸ்?

509

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கின்றது. இப்படம் முடிந்த கையோடு பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பது யார் என்று இன்னும் தெரியாமல் இருந்து வருகின்றது. முதலில் காஜல் அகர்வால் என கூறப்பட்டது.

பின் மியா ஜார்ஜ், கீர்த்தி சுரேஷ் என்று கூற, தற்போது அனைவருமே இதை மறுத்துள்ளனர். இதனால், தளபதியுடன் ஆட்டம் போடும் ஹீரோயின் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸாக இருக்கின்றது.

SHARE