திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணி தொடக்கம் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணாமல் போனவர்களை வெளிப்படுத்துங்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுங்கள் என்ற மூன்று கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.
இதில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காணாமல் போனவர்கள் உயிரிழந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்துக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.