நவீனமயமாக்கப்படவுள்ள அட்டன் நகரம்

322

அட்டன் நகரம் விரைவில் நவீனமயப்படுத்தப்படும். வெளி இடங்களுக்கு சென்று தங்களின் பணங்களை வீண்விரயோகம் செய்யும் மக்கள் அட்டன் நகரத்தில் சொகுசு வாழ்க்கையினை முன்னெடுக்கும் வகையில் எழில் கொஞ்சும் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு மக்களின் பூரண ஆதரவு வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

25.01.2016 அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் கூடப்பட்ட அட்டன் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறண்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் வர்த்தகர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகள், அட்டன் பொலிஸ் அதிகாரிகள், அட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையினர் அட்டன் நகரத்தின் அபிவிருத்தி தொடர்பான இந்நவீன நகரத்தின் மாதிரி வரைபடத்தினை ஒளி திரை காட்சியாக மக்களின் பார்வைக்கு முன்வைத்தனர்.

இந்த ஒளி திரையை பார்வையிட்டதன் பின் அமைச்சர் திகாம்பரம் மேலும் உரை நிகழ்த்துகையில்..

அட்டன் நகரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஒளி திரையின் மூலம் அபிவிருத்தி திட்டங்கள் வெளிக்காட்டப்பட்டது. இதற்கு நகர அபிவிருத்தி அமைச்சின் உதவியின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அட்டன் நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கான மாதிரி வரைபடங்கள் வெளிக்காட்டினாலும் மக்களின் தேவைக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அட்டன் நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி இலகுவில் தமது தேவைகளையும், விருப்பங்களையும் நிவர்த்தி செய்யும் முகமாக நவீன வசதிகளை கொண்ட சந்தை தொகுதி, நவீன ஆடை விற்பனை நிலையம், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, மிகவும் பெரியளவிலான நீர்தேக்கம், மற்றும் வங்கி நிலையங்கள், உயர் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நட்சத்திர ஹேட்டல்கள், அட்டன் பஸ் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், புதிய வீடமைப்பு திட்டங்கள் போன்றவை நவீனமயமாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இவற்றனை அமைப்பதன் மூலம் மக்கள் வெளி இடங்களுக்குச் சென்று பணத்தினையும், நேரத்தினையும் மிச்சப்படுத்தி அட்டன் நகரத்திலேயே தமது தேவைகளையும், விருப்பங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்பதனை கருத்திற் கொண்டு நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் காரணமாகவே மக்களின் பூரண ஆதரவு வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (க.கிஷாந்தன்)

05b859d8-f365-4ab9-921c-ec9b8c822027 07c40daf-1029-4119-8658-e9d170dea1e8 7a1aa168-019e-4caa-8c0e-572603bed337 7f233fd0-deb7-4555-9863-049e1c0e6ac6 9a5c017e-06d6-42fe-b2d4-8ad63e0bada6 25b3353d-4ae8-467b-9079-afedd51b4943 027dd749-707a-40f0-bcf0-ac480d488768 037ca83e-3c2b-4e94-a826-67dab6e3b0f2 63feab79-b580-4944-8ccd-21ea6782a0ba cd700aef-f457-4529-9df8-f4190f4efe4d e3f6ca82-763d-4b1a-a2ef-ee27a5d3bcd4 fabec511-2325-4102-9607-36be3a49151c

SHARE