கூட்டுறவு நிலையத்தில் தீ ஐந்து இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நேற்று இரவு தீப்பற்றியதில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவர் நேற்று இரவு கூட்டுறவு விற்பனை நிலையத்தில் தீப்பற்றி எரிவதாக தெரியவந்ததையடுத்து ஸ்தலத்திற்கு சென்று தீயை பொது மக்கள் மற்றும் பொலிசாருடன் இணைந்து அணைத்ததாகவும் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் பாடசாலை உபகரண பொருட்கள், கணணி, சி.சி.கெமறா, குளிரூட்டி மற்றும் தளபாடங்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இத் தீ சம்பவத்திற்கு மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்