பெண்கள் விடுதிக்குள் புகுந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக விசாரணை

300

 

பெண் பொலிஸ் தங்கியிருந்த வீட்டுக்குள் களவாக நுழைந்ததாக கூறப்படும்  பொலிஸ் கான்ஸ்டபிள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸார் மட்டுமே தங்கியிருக்கும் வீட்டினுள், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மிகவும் இரகசியமான முறையில் நேற்று நுழைந்துள்ளார்.

அதனை கண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சத்தமிட்டதையடுத்து, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், அந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE