இந்நாட்டுப் படையினரின் திறமைகள் மற்றும் அனுபவங்கள் தொடர்பிலான பயிற்சிகளை பெற்றுக்கொள்ள சர்வதேச ரீதியில் நல்ல கிராக்கி காணப்படுகின்றது. எனினும் யாருக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது பற்றி ஆராயாமல் வெறுமனே பயிற்சிகள் வழங்கப்படாது.
சர்வதேச பாதுகாப்புப் படையினர் என்ற போர்வையில் பயங்கரவாதிகள், கொள்ளையர்கள் கூட இலங்கைப் படையினரிடம் பயிற்சி பெற்றுக்கொள்ளக் கூடும்.
விரிவாக ஆராயப்படாது பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.
பயிற்சி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் முப்படையினர் மற்றும் பொலிஸாரிடம் அது குறித்து அறிவித்து தகவல்கள் திரட்டப்படும்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் படையினரின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பல்வேறு தரப்பினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறான கோரிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் கருத்துக்கள் கோரப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு என பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.