இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான இந்திய அரசின் நாலாயிரம் வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்கா தெரிவித்தார்.
இந்தியாவின் 67வது குடியரசுத்தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்கா, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இதேவேளை இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் திட்டத்தின் கீழ் 44 வீடுகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான நாலாயிரம் வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு, இறைமை மற்றும் ஒருமைப்பாடு என்பவை தொடர்பில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் பதவியேற்று 90 நாட்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு இருதரப்பு இராஜதந்திர விஜயங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி – இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா ஆர்வம்: வை.கே.சின்ஹா