யாழ்.இராசாவின் தோட்ட வீதியில் நீண்ட காலமாக குப்பைகள் நிறைந்து வழிந்து கொண்டு இருந்தன. மழைக்கு முளைத்த காளான் போல அவ்விடத்தில் குப்பைகள் யாவும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் தீடிரென பிள்ளையார், முருகன் சிலை ஒன்றை வைத்து அதற்கு மலர் மாலையும் அணிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட காலமாக குறித்த வீதியால் பயணிப்போர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. குறிப்பாக அவ்வீதியில் பிரபல்யமான பாடசாலை ஒன்றும் இருக்கிறது. அவ்விடத்திலே கொட்டப்படும் குப்பைகள் வீதிகளுக்கு வருவதுடன் துர்நாற்றமும் வீசிவதால் பாடசாலை மாணவர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
நேற்றைய தினம் திடீரென்று அவ்வீதியில் நிரம்பி வழிந்த குப்பைகள் யாவும் அகற்றப்பட்டு குப்பை போடாதீர்கள் என்ற வாசகம் எழுதப்பட்டு பிள்ளையார், முருகன் சிலை வைக்கப்பட்டிருப்பது பயணிப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கப்படவேண்டியதொன்று. அதுமட்டுமல்லாது குறித்த இடத்தில் பிள்ளையார், முருகன் சிலை வேரூன்றப்பட்டதால் அவ்விடத்திலே யாரும் குப்பை போட முன்வரமாட்டார்கள் என்றும் குறித்த பகுதியால் பயணிப்போர் சுட்டிக்காட்டியிருந்தனர்.