ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்த முடியாது திண்டாடும் பிரதேச செயலாளர்கள்!

269

யாழ் மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்த முடியாது பிரதேச செயலாளர்கள் பெரும் திண்டாட்டத்திற்க்கு உள்ளாகி வருகின்றார்கள்.

யாழ் மாவட்டத்திற்க்கு நான்கு இணைத் தலைமைகள் அரசினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் அடிப்படையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சோந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் மற்றும் மகளிர் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.

இவர்கள் நால்வரையும் குறிப்பிட்ட தினத்தில் ஒரு இடத்தில் சந்திக்க வைத்து கூட்டம் நடத்த பிரதேச செயலாளா்கள் நேரம் ஒதுக்குமாறு கேட்டால் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நேரத்தை, நாளை மாற்றிக் குறிப்பிடுவதினால் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் பிரதேச செயலாளா்கள் பெரும் திண்டாட்டத்திற்க்கு உள்ளாகியுள்ளார்கள்.

கடந்த இரண்டு வருட கால இடைவெளியின் பின்னர் இத்தகைய கூட்டங்களை கூட்டி பிரதேச தேவைகள் சம்பந்தமாக கலந்துரையாட முடியாத நிலைமை பொது மக்கள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE