அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முன் உரிமைப்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இணைத்தலைவர் பொறுப்புக்கள் பற்றி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்த போதே பராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆதாரங்களுடன் மறுத்துரைத்தார்.
இரண்டரை வருடங்கள் இணைத்தலைவர் பொறுப்பை முதலமைச்சர் ஏற்றிருந்தும் முல்லை மாவட்ட மண்ணில் ஒரே ஒரு கூட்டமே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது மாவட்டம் தொடர்பான பிரச்சனைகளை அந்த அந்த மாவட்டத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சகல கட்சிகளில் இருந்தும் ஒவ்வொருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தீர்ப்புகள் வழங்குதற்கு இது நீதிமன்றம் அல்ல இது மக்களின் பிரச்சனைகளை அறிந்து திணைக்களங்கள் ஊடாக தீர்த்து வைக்கும் ஒரு அபிவிருத்திக்குழு கூட்டமே என தெரிவித்தார்.