சர்ச்சைக்குள்ளானார் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

310

 

நியாயபூர்வமான முல்லைமாவட்ட வாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் றிசாட்பதியுதீன் பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடமாகாணசபை உறுப்பினர் ஜெனோபர் ஆகியோர் வெளிப்படுத்திய போது அங்கு குறுக்கிட்ட வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பெரும் சத்தமாக நியாமற்ற ஏற்க முடியாத கருத்துக்களை எழுப்பினார். அங்கு காரசாரமாக கருத்து தெரிவித்த ஜெனோபர் முஸ்லீம்மக்கள் உம்மிடம் பிச்சை கேட்கவில்லை நியமான மீள்குடியேற்றம் தான் கேட்கின்றனர். என கடுமையாக சாடினார்.
1a6f85da-3d7b-40b6-a88d-5de2fcf0ded9
தொடர்ந்து பத்துநிமிடம் வரை சபை அல்லோலமாக காணப்பட்டது. இறுதியில் அனைவரையும் அமைதிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணை தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வடக்கில் நியாயமான முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்தை நடைமுறைப்படுத்த ஒற்றுமையாக செயல்படும் என கருத்து தெரிவித்தார். வடகிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்கள் தழிழ்பேசும் மக்களாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பனராகிய நாம் பார்க்கின்றோம் என தெரிவித்தார்.
மேலும் இது சம்மந்தமாக தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூட்டங்கள் கடந்த பராளுமன்ற அமர்வின்போது தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அமைச்சர்களினாலும் நடைபெற்றதை சுட்டிக் காட்டினார். முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்தாக மாவட்ட ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட ஆவலாக உள்ளது என்ற கருத்தையும் எடுத்துரைத்தார்.
SHARE