ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 12ஆம் பிரிவுக்கமைவாக இக்குற்றப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் நான்கு இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட புலனாய்வு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியானது அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களின் பெயரில் காசோலையாக எழுதப்பட்டு, அவை வங்கியில் மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.