தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது சாரதி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 29ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரட்ன மற்றும் பிரதீப் சமிந்த ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 09ம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜூம் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.